துபையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 26.02.2010 அன்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை இறைச்செய்திகளும், அதன் சிறப்புகளும் என்ற தலைப்பில் சகோ. மெய்தீன் பாதுஷா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.