துபையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

DSC03203DSC03210DSC03208கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ‘வாழ்க்கைகே வணக்கமாக’ என்ற தலைப்பில் சகோ. ஹூஸைன் ஸலஃபி (இலங்கை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.