துபையில் நடைபெற்ற லெப்பைக்குடிகாடு சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம்

050220102940502201029105022010289கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் சொந்த ஊர் மற்றும் மாவட்டங்களிலும் மார்க்க விளக்கப் பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் துபையிலும் கிளைகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் லெப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் துபை TNTJ  மர்கஸில் கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் முதல் இஷா தொழுகை வரை, அவ்வமைப்பின் தலைவர் சகோ. மெய்தீன் பாதுஷா அவர்கள் தலைமை யில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ‘அழைப்புப் பணியின் அவசியம்’ என்ற தலைப்பில் சகோ. மு.சாஜிதுர்ரஹ்மான் (JT தலைவர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.