துபையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

கடந்த 30.09.10 அன்று துபாய் மண்டலத்தின் பொதுக்குழு அமீரக  ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இபுறாஹீம் அவர்கள் தலைமையில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.சர்புதீன் அவர்கள் முன்னிலையில் துபை மர்கஸில்  இரவு 10:30 மணியளவில் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் சகோ.ஸாஜிதுர் ரஹ்மான் அவர்கள் கடந்த நிர்வாகத்தைப் பற்றி ஓர் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் மண்டலச் செயலாளர் சகோ.முஹம்மது நாஸிர் அவர்கள் கடந்த வருடத்தின் செயற்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்கள்.பின்னர் மண்டலப் பொருளாளர் சகோ.முஹம்மது இபுறாஹீம் அவர்கள் கடந்த வருடத்தின் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து  புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.