துபையில் நடைபெற்ற பேச்சு பயிற்சி போட்டி

dubai_marka_nigalchi_7dubai_marka_nigalchi_6dubai_marka_nigalchi_5dubai_marka_nigalchi_4dubai_marka_nigalchi_2dubai_marka_nigalchi_1ஜமாஅத்துத் தவ்ஹீத் (TNTJ) அல்கோஸ் கிளை சார்பில் கடந்த 22.05.2009 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை JT மர்கஸில் பேச்சுப்போட்டி ஜமாஅத்துத் தவ்ஹித் துபை மண்டல தலைவர் மு. சாஜிதுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஃவா அணி செயலாளர் சகோ. முஹம்மதலி மற்றும் பொருளாளர் சகோ. மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை நிர்வாகிகள் அணைவர்களும் கலந்துக் கொண்டனர்.

மேலும், இப்பேச்சுப் போட்டியில், குறிப்பாக ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை தலைமை மற்றும் கிளை நிர்வாகிகள், புதியதாக பேச்சுப்பயிற்சி மேற்கொள்ளும் சகோதரர்கள் மட்டும் தான் பங்கு பெற அனுமதிக்கப்பட்டும், 22 சகோதரர்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கு பெற்றனர். இப்போட்டியில் 1. இஸ்லாமும் பொருளாதாரமும், 2. ஆன்மீகமும் அரசியலும் 3. TNTJ யும் மற்ற இயக்கங்களும் ஓர் பார்வை எனும் தலைப்புகள் கொடுக்கபட்டு, கொடுப்பட்ட தலைப்புகளில் சகோதரர்கள் தங்களுக்கே உரிய பாணியில் புதியவர்கள் எனும் சங்கோஜமின்றி மிகச்சிறப்பாக உரையாற்றினர். இப்போட்டியில் சகோதரர்கள் முஹம்மது நாஸிர் (பொதுச்செயலாளர் JT), தாஜூதீன் (ஆசிரியர் ஆலிம் கோர்ஸ் அல்கோஸ்) மற்றும் சாஜிதுர்ரஹ்மான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சகோ. முஹம்மதலி மற்றும் மன்சூர் ஆகியோர்; இந்நிகழ்சியை தொகுத்து வழங்கினார்கள்.

மேலும், இப்போட்டியில் பரிசுகளை தட்டிச் சென்ற சகோதரர்கள் தாங்கள் பெற்ற பரிசுகளை தஃவா செய்வதற்காக கிளைகளின் நூலகத்திற்கு வக்பு செய்தது கலந்துக் கொண்ட அணைவர்களையும் வியப்பில் ஆழ்த்தி எங்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசு மறுமை கூலி தானே தவிர இதுவல்ல என்பதை உணர்த்தியது.

மேலும் இப்போட்டியில் முதல் பரிசாக புகாரி தமிழ்மூலம் 7 பாகம் மற்றும் PJ தமிழ் மொழிபெயாப்பு குர்ஆன், இரண்டாவது பரிசாக முஸ்லீம் தமிழ்மூலம் 4 பாகம் மற்றும் PJ மொழிபெயர்ப்பு தமிழ் குர்ஆன் மூன்றாவது பரிசாக இப்னுகதீர் தப்சீர் 3 பாகம் மற்றும் PJ மொழிபெயர்ப்பு தமிழ் குர்ஆன் நான்காவது பரிசாக நபிவழித்தொகுப்பு 4பாகம் மற்றும் PJ மொழிபெயர்ப்பு தமிழ் குர்ஆன் மற்றும் போட்டியில் கலந்துக் கொண்ட அணைவர்களுக்கும் நபிவழித்தொகுப்பு 4 பாகம் வழங்கப்பட்டது.

பரிசுகளை ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகிகள் மற்றும் தாயிக்கள் வழங்கினார்கள். இறுதியில் நிறைவுரையாக சகோ. தாஜூதீன் அவர்களின் தாயிக்களுக்கான மிகச்சிறந்த அறிவுரையை வழங்கினார்கள். சகோ. அப்துல் ரசீத் (து.செயலாளர் அல்கோஸ் கிளை) அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

எல்லாம் வல்ல இறைவன் நம் செயல்களுக்கு நற்கூலி வழங்குவானாக!