துபையில் நடைபெற்ற பேச்சாளர்கள் பயிற்சி முகாம்

15432அல்லாஹ்வின் கிருப்பையால் சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பிற மக்களிடமும் சொல்லவேண்டும் என்கிற அடிப்படையில் பிரதி புதன்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை மர்கஸ – ல் “இளம் தாயிக்களுக்கான பேச்சு பயிற்சி முகாம்” நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு அம்சமாக சென்ற 27.01.2010 புதன் அன்று சகோ. மாங்குடி யாசீன் அவர்களின் தலைமையில்,சகோ.பரங்கிப்பேட்டை முஹம்மது இஸ்மாயில் (மண்டல து.பொதுச்செயலாளர்) அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சகோ.அப்துல்லாஹ் – மண்ணறை வாழ்க்கை, சகோ.சபியுல்லாஹ் – நற்பண்புகள், சகோ.கலீல் – லாயிலாஹ இல்லல்லாஹ், சகோ.பாண்டி ரபீக் – விஞ்ஞானம், சகோ.சென்னை ரபீக் – பொறுமை, சகோ.அஸார் – இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம், சகோ.குத்புதீன் – திக்ர் ஆகிய தலைப்புகளில் சிறப்பான முறையில் உரைநிகழ்தினார்கள். இறுதியில் “போச்சளார்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்” என்கிற தலைப்பில் சகோ.மாங்குடி யாசீன் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…