துபையில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா முகாம்

DSC03198DSC03193கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு  வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மர்கஸில் நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா நிகழ்ச்சி கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 11.45 மணி வரை நடை பெற்றது.

அதில் சகோ. ஹாமின் இப்ராஹிம் (அமீரக ஒருங்கினைப்பாளர்) அவர்கள் ‘நிர்வாகவியல்’ எனும் தலைப்பில் எவ்வாறு நிர்வாகம் செய்வது மற்றும் நிர்வாகிகளின் பண்புகள் குறித்து வகுப்பு நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாக அமைந்தததாக கலந்துக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் தாயிக்கள் கருத்துக் கூறினார்கள்.

மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழகம் மற்றும் அனைத்து கிளைகளிலும் நடத்தப்பட வேண்டும் என்பது பலரது கருத்தாக இருந்தது.