துபையில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம்

05022010296கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் சொந்த ஊர் மற்றும் மாவட்டங்களிலும் மார்க்க விளக்கப் பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் துபையிலும் கிளைகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் துபை TNTJ  மர்கஸில் கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் 11.30 வரை, ஜே.டி. தலைவர் சகோ. மு.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில், ஜே.டி. துனைத்தலைவர் சகோ. ரஃபீக் மற்றும் அமீர்பாட்சா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாங்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு, பின்னர் வரும் 12.02.2010 அன்று மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துச் சகோதரர்களையும் அழைத்து கூட்டம் நடத்துவதெனவும், நிர்வாகிகள் தேர்வு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.