துபையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம்

DSC03262DSC03257DSC03270DSC03269DSC03263ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல செயற்குழுக்கூட்டம் கடந்த 18.02.2010 வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் 12 மணி வரை JT துபை மர்கஸில் JT தலைவர் மு. சாஜிதுர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ஜே.டி. துபை மண்டல கிளைகளான, அவீர், ஹோர் அல் அன்ஸ், டேய்ரா, சத்வா, அல்கோஸ், ஜெபல்அலி, சோனாப்பூர், கிஸைஸ் மற்றும் அதிராம்பட்டிணம், திருவாருர் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் கிளைகளும் கலந்துக் கொணடு சிறப்பித்தனர்.

கிளைகளின் செயல்பாட்டு அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டதற்கு பின்னர் பின்வரும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. இன்ஷா அல்லாஹ் மாநில தலைமை ஏற்பாடு செய்துள்ள மாநிலம் தழுவிய கோரிக்கை மாநாட்டை முன்னிட்டு, மாநாட்டிற்கான பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, குழுக்களாக பிரித்து, இந்தியாவைச் சேர்ந்த அனைத்து மாநில முஸ்லிம்களிடமும் செய்திகளைக் கொண்டு செல்வதுடன் அவர்களிடமும் பொருளாதாரத்தை வசூலித்து அனுப்பவதென முடிவு செய்யப்பட்டது.

2. கோரிக்கைகள் அடங்கிய பிரசுரத்தை மாநில தலைமையிடம் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் நோட்டீஸ் விநியோகம் மற்றும் வாராந்திர சொற்பொழிவுகளின் போது மக்களிடம் அறிவிப்பு செய்வதன் மூலம் மாநாட்டு செய்தியினை விளம்பரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

3. இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12.03.2010 அன்று அல் வாசல் மருத்துவமனையுடன் இனைந்து இரத்த தான முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

4. இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19.03.2010 அன்று ஜெபல் அலி கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தவதென முடிவு செய்யப்பட்டது.

5. இன்ஷாஅல்லாஹ் சோனாப்பூரில் தர்பியா நிகழ்ச்சி நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

6. இன்ஷாஅல்லாஹ் ஹோர் அல் அன்ஸ் கிளையில் மாநிலத் தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களை கொண்டு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன் லைனில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.