துபையில் நடைபெற்ற குர்ஆன் மாநாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

dsc02767

dsc02767

dsc02767

dsc02767

dsc02767

கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை கடந்த 14.09.2009 மாலை 4.45 மணி முதல் இரவு 8.35 மணி வரை ஆறாவது குர்ஆன் மாநாடு துபை சோனாப்பூர் கிளை சார்பாக சோனாப்பூரில் அமைந்துள்ள பலதியா பள்ளியில் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல தலைவர் சகோ. மு.சாஜிதுர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் துபை ஜமாஅத்தின் மூத்த ஆலோசனைக்குழு உறுப்பினர் பனைக்குளம் சர்ஃபுதீன் காக்கா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

குர்ஆன் கூறும் மனித நேயம் எனும் தலைப்பில் (மாநில தனிக்கை குழு உறுப்பினர்) சகோ. சைஃபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்களும்,

நிம்மதியான வாழ்விற்கு குர்ஆன் வழங்கும் போதனைகள் எனும் தலைப்பில் சகோ. அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி அவர்களும்

ரமளான் தரும் படிப்பினை எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சேக் (தலைவர். அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்) அவர்களுகம் உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்திற்கு அமீரகத்தில் உள்ள அபுதாபி, அல்அய்ன், அஜ்மான், ராசல்கைமா, ஃபுஜைரா, சார்ஜா மற்றும் துபையில் உள்ள அல்கோஸ், டேய்ரா, கிஸைஸ், சோனாப்பூர், அவீர் மற்றும் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டலச் செயலாளர் சகோ. முஹம்மது நாஸிர் அவர்கள் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அணைத்து துபை மண்டல நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.