துபையில் நடைபெற்ற இளம் தாயிக்கள் பேச்சு பயிற்சி

534 (1)2 (1)அல்லாஹ்வின் கிருபையால் வாரந்தோறும் புதன்கிழமையில் தவ்ஹீத் ஜமாஅத் (JT) – துபை மர்கஸ்-லில் இளம் தாயிக்களை (மார்க்க பிரச்சாரகர்களை) உருவாக்கும் விதமாக பேச்சுப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

கடந்த புதன்கிழமை (23-12-2009) அன்று மௌலவி. பண்டாரவடை சுல்தான் அவர்கள் தலைமையில், சகோ.லெப்பைக்குடிக்காடு முகையத்தீன் அவர்கள் முன்னிலையில் பேச்சுப் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியில் பல பின்வரும் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாக தங்களுடைய பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

பரங்கிப்பேட்டை முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நற்பண்புகள் என்ற
தலைப்பிலும்

சோழபுரம்.குத்புதீன் அவர்கள் ரியா என்ற தலைப்பிலும்

சென்னை ரஃபீக் அவர்கள் படைப்பாளனின் பண்பு கள் என்ற தலைப்பிலும்

வடக்கு மாங்குடி சாஹீல் அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே
வணங்கவேண்டும் என்ற தலைப்பிலும்

சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள் எல்லாம் புகழும்
அல்லாஹ் ஒருவனுக்கே….

இறுதியில் சகோ.கடையநல்லூர் நாசிர் அவர்களின் (மண்டலச் செயலாளர்- துபை) நன்றியுரையுடன் முடிந்தது.