துபையில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

photo 5photo 2photoதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் சொந்த ஊர் மற்றும் மாவட்டங்களிலும் மார்க்க விளக்கப் பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் துபையிலும் அந்தந்த ஊர்களுக்குரிய கிளைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் JT மர்கஸில் கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6.15 வரை, ஜே.டி. தலைவர் சகோ. மு.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில், மாவட்டப் பொருப்பாளர் சகோ. மொஹைதீன் (இராமேஷ்வரம்)மற்றும் மூத்த ஆலோசகர் பனைக்குளம் சர்புதீன அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இராமநாதபுரத்தில் மாவட்ட மர்க்கஸ் இடம் வாங்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு, அமீரகத்தில் உள்ள மற்ற மண்டல நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிந்த வரை பொருளாதாரம் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் அதற்காக பகுதி பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.