துபையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

dubai_blood_300509_5dubai_blood_300509_4dubai_blood_300509_3dubai_blood_300509dubai_blood_300509_6dubai_blood_300509_2ஜமாஅத்துத் தவ்ஹீத் (TNTJ) துபை மண்டலம், துபையில் உள்ள அல் வாசல் மருத்துவமணையுடன் இணைந்து கடந்த 29.05.2009 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இலவச இரத்த தான முகாம், ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல தலைவர் சகோ. மு. சாஜிதுர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் சகோ. முஹம்மது நாசர் ஆகியோர் முன்னிலையில், JT மருத்துவ அணிச் செயலாளர் சகோ. சாதிக்அலி மேற்பார்வையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டதால், சகோதரர்கள் காலை 7;.45 மணி முதலே வந்து சேர தொடங்கினர். குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட முகாம் சரியாக காலை 11 மணியளவில் நிறைவுற்றது. முறையான விளம்பரமோ அல்லது சுவரொட்டிகளோ ஒட்டப்படாத நிலையிலும், இரத்த தானம் செய்யப்பட்டு மூன்று மாத ங்களே ஆகியிருந்ததாலும், துபை கிளைகளான அல்கோஸ், சோனாப்பூர், டேய்ரா, அவீர், ஹோர்அல்அன்ஸ், கிஸைஸ் மற்றும் சத்வா போன்ற பகுதிகளில் இருந்து மொத்தம் 60 நபர்கள் தான் வருவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், 103 சகோதரர்கள் குருதி தானம் செய்ய முன் வந்தது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரமே தேவையில்லை, வாய்வழிச் செய்தி கிட்டினாலே போதும் நாங்கள் மனமுவந்து கலந்துக் கொள்ள தயார் என இத்தனை ஃபித்னாக்களுக்கும் மத்தியில் எல்லாம் வல்ல அல்லாஹூத்தாலா தன்னலமில்லா கொள்கை சகோதரர்கள் மூலம் மீண்டுமொருமுறை நிருபித்து விட்டான்.

அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்ச்சியில், JT துனைத்தலைவர் சகோ. நெடுங்குளம் ரஃபீக், தஃவா செயலாளர் முஹம்மது அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் சாந்து உமர் மற்றும் பகுதி செயலாளர்கள், ஜபருல்லாஹ், முபாரக், தாவூத், இஸ்தார்அலி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். பொதுச் செயலாளர் அவர்களின் மேற்பார்வையில் தொண்டர் அணி சகோதரர்கள் மிகச் சிறப்பாக எற்பாடு செய்திருந்தனர். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் செயல்களுக்கான கூலியை மறுமையில் நல்குவானாக!