துபையில் தேரா கிளையில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி

photo2 (1)photo1 (1)கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலம் சார்பாக வாரந்தோறும் முஸ்லிம்களிடையே அவர்கள் வசிக்கும் இருப்பிடங்கள் தேடிப் போய்  தஃவா செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் தேரா கிளையில் சகோ.சுல்தான் “முஸ்லிம்களிடம் இருக்கவேண்டிய பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் ஜமாஅத் தவ்ஹீத் – யை சார்ந்த சகோ.முஹம்மது இஸ்மாயில் சகோ.குத்புதீன் சகோ.சாந்து உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.