துபையில் அவீர் பகுதியில் புதிய கிளை உதயம்!

dubai_new_branch_aveer_2dubai_new_branch_aveer_1dubai_new_branch_aveer_3கடந்த 12.03.2009 அன்று (வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் அவீர் பலதியா கேம்ப் அருகில் உள்ள பள்ளிவாசலில் அவீர் பகுதியில் வசிக்கும் தவ்ஹித் சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ஜமாஅத்துத் தவ்ஹித் துபை மண்டல தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். பின்னர் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் பேசக்கூடிய சகோதரர்களுக்கும் தஃவா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஜமாஅத்துத் தவ்ஹித் துபையின் அவீர் கிளை அமைப்பதென முடிவு செய்து, அதனடிப்படையில் பின்வரும் சகோதரர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
1. தலைவர் : பக்ருதீன் கரம்பக்குடி 050 – 4359640
2. துனைத்தலைவர் : அலியார் (பூந்தமல்லி) சென்னை 050 – 5789869
3. செயலாளர் : பக்கீர் முஹம்மது மதுக்கூர் 050 – 3509761
4. துனைச்செயலாளர்: திவான் மைதீன் கடையநல்லூர்; 050 – 2437803
8. பொருளாளர் : அக்பர் கடையநல்லூர் 050 – 2582923

மேலும் இக்கூட்டத்தில் மாதமொருமுறை மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதெனவும், வாராந்திர நோட்டிஸ் வினியோகம் செய்வது, தஃவாக்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு ஜமாஅத்துத் தவ்ஹித் துபையின் சோனாப்பூர் பகுதி பொருப்பு செயலாளர் சகேர் தாவுது அவர்களும், சோனாப்பூர் கிளை 2ன் முன்னாள் து. செயலாளர் சகோ. பாதுஷா, சகோ. அவனியாபுரம் கலில்ரஹ்மான்; அவர்களும் முன்னிலை வகித்தனர். பின்னர் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்களின் உரையுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.