துத்துக்குடி தந்தி அலுவகம் முன்பு நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

Copy of Press Newsமுஸ்லீம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை பாசிச சக்திகள் 1992ம் வருடம் டிசம்பர் 6ம் தேதி உடைத்தனர். இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் கலவரங்களும் ஏற்படுத்தப்பட்டு உலக அரங்கில் இந்தியாவுக்கு மாபெரும் தலைகுனிவு ஏற்படுத்தப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது இந்த கமிஷன் 17 ஆண்டுகளாக விசாரித்த ஆவணங்கள் சில மாதங்களுக்கு முன்பு காணவில்லை என்று ஒரு வேடிக்கையான அறிவிப்பு வெளியானது.

தற்போது இக்கமிஷன் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய 68 குற்றவாளிகளின் பெயரை வெளியிட்டுள்ளது. இக்கமிஷன் குற்றவாளிகள் என்று அறிவித்த தேச விரோத சக்திகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், பாபர் மசூதி நிலத்தை மீண்டும் முஸ்லீம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி அளவில் தூத்துக்குடி தந்தி அலுவலகம் முன் நடைபெற்றது.

இந்த மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் பிர்தௌசி கண்டன உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் யு.லியாகத் அலி, செயலாளர் அப்பாஸ், பொருளாளர் இப்ராஹீம் துணைச்செயலாளர் அப்துஸ்ஸமது, அப்துல் ஹமீது, வருசை, மக்கி, அக்தர் அய்யூப், சுல்தான், மவ்ஜுது சமான் மற்றும் 25க்கும் மேற்பட்ட கிளையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டார்கள். சகோதரர் அன்ஸாரி நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த செய்தி தினகரன், தினதந்தி, தினமலர் ஆகிய நாளிதழில் வெளிவந்துள்ளது.