டி நகர் கிளை யில் மாபெரும் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் டி நகர் கிளை சார்பாக நேற்று (16-12-2010) மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. KGH, GH, STANLEY ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது.

பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் மற்றும் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஏராளாமானோர் கலந்து கொண்ட இம்முகாமில் 255 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!