திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!சென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாபக நக்கீரன் வார இதழுக்கு பேட்டியளித்த திலகவதி ஐ.பி.எஸ் அவர்கள் கௌரவக் கொலைகள் அதிகமாக அரபு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மத்திற்கு இந்தச் சம்பவம் புதிதல்ல என்று பேட்டியளித்துள்ளார்.

திலகவதி அவர்கள் தன் கருத்தில் அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் அளவுக்கதிகமாக நடைபெற்று வருவதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியன் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் செய்தி புதிதானதல்ல என்று கூறியுள்ளார்.

திலகவதியின் இந்தப் பேட்டி,
அரபு நாடுகளில் கவுரவக் கொலைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும்,
அது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்புடையது போலவும்
சலீம் இஸ்லாமியர் என்பதால் இந்தச் சம்பவம் அதாவது இஸ்லாமிய மதம் இத்தகைய காட்டுமிராண்டித்தனச் செயலை அங்கீகரிப்பது போலவும்,
இஸ்லாமிய மக்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்வதாகவும்,
மேலும் இஸ்லாமியர்கள் இவைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கருத்தை உண்டாக்கியுள்ளது. திலகவதியின் இந்த பேட்டி பிறசமய மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த கருத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலவதியின் இந்த பேட்டியை கண்டித்தும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 24-6-2009 அன்று நடத்தியது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.