திருவாரூர் மாவட்டத்தில் மூன்று நாட்களில் 40 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்!

DSCF0605DSCF0627DSCF1666DSCF0611தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக மாவட்டம் தழுவி அளவில் மூன்று நாட்கள் (13-02-2010, 14-02-2010,  15-02-2010 )திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிளைகள் இருக்கும் ஊர்களுக்கும் கிளைகள் இல்லாத முஸ்லிம்கள் இருக்கும் ஊர்களுக்கும் சென்று ஏகத்துவ கொள்கை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சுமார் 30 ஊர்களில் 40  இடங்களில் நடைபெற்றது தெருமுனைப்பிரச்சாரங்கள் தவ்ஹீத் புரட்சியாக அமைந்தது.

மாநிலத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு அழைப்பாளர்கள் மற்றும் திருவாரூர் மாவட்டப் பேச்சாளர்களை வைத்து நடத்தப்பட்ட இத்தெரு முனைப்பிரச்சாரக்  கூட்டம்  முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்  தந்ததோடு மாற்று மதத்தைச் சார்ந்தவர்களையும், காவல்துறை அன்பர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்கள். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளின் கூட்டு முயற்சியினால்  நிகழ்ச்சியை எல்லாம் வல்ல இறைவன் சிறப்பாக்கி வைத்தான். அல்ஹம்து லில்லாஹ்!