திருவாரூர் கொலை விவகாரம்: TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.

துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ, உறுப்பினரோ, அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக்கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல.

அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால், உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த அறிக்கை பிரபல தமிழ் செய்தி இணையதளமான தட்ஸ் தமிழ் ல் வெளியாகியுள்ளது.

தட்ஸ் தமிழ் செய்தி

இந்த அறிக்கை நக்கீரன்  இணையதத்திலும் வெளியாகியுள்ளது.

நக்கீரன் செய்தி