திருவாரூர் கொலை விவகாரம்: சமூக வீரோதியின் செயலே! உண்மை நிலவரம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு நேரடி ஒளிபரப்பில்!

திருவாருர் மாவட்டம் திருவிடைச்சேரி பகுதியில் சமூக வீரோதி ஒவருர் மூலமாக இரண்டு பேர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது குறித்து பல பின்னனி தகலவ்களுடனும் இந்த சம்பவத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சாயம் பூசி பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கும் பத்திரி்க்கைகளை கண்டித்தும் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (6-9-2010) ரமளான் நேரடி ஒளிபரப்பில்  மவ்லவி பி.ஜே அவர்கள் உரையாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

இறைவன் திருமறையில்..

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.  அல்குர்ஆன் 49-6

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” முஸ்லிம்-6