ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பட்டாபிராமில் உள்ள வசந்தம் திருமண மண்டபத்தில் கடந்த 23.04.2010 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.ஜைனுல்ஆபிதின் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் இரத்த தான சேவையை ஊக்குவிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் நடத்திய கிளைகளுக்கு விருதுகள் மற்றும் சன்மானம் வழங்கப்பட்டது.
அரக்கோணம் கிளை முதல் விருதையும், ஆழ்வார் திருநகர் கிளை இரண்டாம் விருதையும், ஆவடி கிளை மூன்றாம் விருதையும் பெற்றது.
மேலும் முகாம் நடத்திய கிளைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 1.5 இலட்சம் முஸ்லிம்களை மாநாட்டிற்கு திரட்டுவது என தீர்மானம் இயற்றப்பட்டது.