திருவண்ணாமலையில் TNTJ நிர்வாகியின் கடையை தாக்கிய மர்ம நபர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா அவர்களின் கடை நேற்று (26-12-2010) மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளது. கற்களை கொண்டு வந்து அந்த நபர் தாக்கி சென்றுள்ளான், தாக்கியவன் யார் என்று தெரியவில்லை.

சாதிக் பாட்சா அவர்களுக்கு சொந்த பகை ஏதும் இல்லை என்பதால் ஏகத்துவதற்கு எதிராக உள்ள சிலர் இதை செய்திருக்க கூடும் என்று கருதி காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது.