திருமணம் நடத்த பணம் பெறக் கூடாது

நமது ஜமாஅத்தால் நடத்தி வைக்கப்படும், திருமணங்களில் இனிமேல், தஃப்தர் – திருமணப் பதிவுத் தொகை பெற வேண்டாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் தஃப்தர் வழங்கி திருமணத்தை பதிவு செய்து திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு சிறிய தொகையை சில மாவட்ட கிளை நிர்வாகங்கள் பெற்று வருகின்றன.

திருமணம் நடத்தி வைக்க பணம் கேட்பதாக சிலர் இதை தவறாக புரிந்து கொள்கின்றனர்.

எனவே இனிவரக்கூடிய காலங்களில் திருமணத்தை பதிவு செய்வதற்காக, எந்த தொகையையும் திருமண வீட்டரிடத்தில் பெற வேண்டாம் என்பதை அறிவிப்புச் செய்கின்றோம்.

அவர்களாகவே, ஜமாஅத்தின் சமுதாயப் பணிகளை பார்த்து விரும்பி ஏதேனும் பொருளாதார உதவி செய்தால் நன்கொடையாக அதை பெற்றுக் கொள்ளலாம். திருமணம் முடித்து வைப்பதற்காக இந்தத் தொகையானது பெறப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி விடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்