திருமங்கலக்குடியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

திருமங்கலக்குடியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்திருமங்கலக்குடியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்திருமங்கலக்குடியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்திருமங்கலக்குடியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில், காயிதே மில்லத் தெருவில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 04.07.2009 சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஏ.எஸ். அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலாண்மை குழுத் தலைவரும், ஏகத்துவம் இதழ் ஆசிரியருமான சகோ. சம்சுல்லுஹர் ரஹ்மானி “பெண்கள் அதிகம் நரகில் நுழையக் காரணம்” என்ற தலைப்பில் ஆக்ரோஷமான சிறப்புரை ஆற்றினார்.

மாநிலப் பேச்சாளர் சகோ. அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி “பெரும் பாவங்கள்” என்ற தலைப்பில் தனக்கே உரிய பாணியில் சிறப்புரை ஆற்றினார்.

அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரி ஆலிமா சகோதரி. சர்மிளா “நபித் தோழியர் வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 1800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மார்க்க சிந்தனையை பெற்றுச் சென்றனர். இதில் மிக அதிகமான பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.