திருமங்கலக்குடியில் நடைபெற்ற பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

13022010(011)13022010(017)13022010(023)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி கிளையில் கடந்த 13.02.10 சனிக்கிழமை அன்று கேள்வி, பதில் நிகழ்ச்சி மற்றும் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் விஞ்ஞான ஒளியில் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி தலைமை ஆசிரியை சபுர் நிசா ஆலிமா அவர்கள் இன்றைய முஸ்லிம்களின் நிலை ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் B.கலிபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் H.சர்புதீன், மாவட்ட து.தலைவர் B.இம்தியாஸ், கிளைச் செயலாளர் R.அப்துர்ரஹ்மான், கிளைப் பொருளாளர் S.உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தொண்டரணி செயலாளர் A.இத்ரிஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.