தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தர்பியா உடுமலைபேட்டை மஸ்ஜித் அத்தக்வா பள்ளிவாசலில், 17.01.2010 ஞாயிற்றுக்கிழமை காலை பஜ்ர் முதல் அசர்வரை நடைபெற்றது.
மாநில செயலாளர் மௌலவி கோவை R.ரகமத்துல்லாஹ் அவர்கள், “ஏகத்துவவாதி கொள்கையில் சமரசம் செய்யக்கூடாது” என்பதையும், தாவா செய்வதின் அடிப்படை ஒழுங்குகள் பற்றியும், மாநில துணை தலைவர் மௌலவி எம்.ஜ.சுலைமான் அவர்கள், “தர்க்கவாதிகளை எப்படி எதிர்கொள்வது” என்பது பற்றியும், “ஏகத்துவவாதி அறிந்து வைத்துகொள்ள வேண்டிய மார்க்க அறிவு” பற்றி கலந்து கொண்ட சகோதரர்கள் பயன்பெறும் வகையில் நகைசுவையுடன் பாடம் நடத்திவிளக்கினார்கள்.
சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைபெற்ற இத்தர்பியா நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!