திருப்பாலைக்குடியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் கடந்த 20-3-2010 அன்று ஆண்டு விலா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களை கூத்தாட விட்டு பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது மின்சார கம்பி துண்டித்து கீழே விழுந்து மேடையில் உள்ளவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் ஒருவர் உயிர் இழந்தார் சுமார் 38 குழந்தைகள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் வண்ணம் இராமநாதபுரம் மாவட்டம் TNTJ தொண்டர்கள் களப்பணியாற்றினர்.

பள்ளி ஆண்டு விழா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களை டூயட் பாடல்களுக்கு ஒருசேர கூத்தாட விட்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்கையையே நாசமாக்கும் பெற்றோர்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் கல்வி நிறுவனங்களும் இனியாவது திருந்த வேண்டும்!