திருப்பனந்தாள் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் கடந்த 28.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் அக்பர் அலி அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துணை தலைவர் முஹம்மது ரியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.