திருநாகேஸ்வரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் மவ்லித் மாதமான(?) ரபியுல் அவ்வல் மாதத்தில் மவ்லித்களையும் மீலாது விழாக்களையும் எதிர்க்கும் முகமாக, விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 03.02.2011 வியாழன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிக்கு எதிரில் நடைபெற்றது.

ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “மவ்லிதும் மீலாதும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிக அளவில் ஆண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வீடுகளிலிருந்து பிரச்சாரத்தை கேட்டு பயன் பெற்றனர்.

கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.