திருச்சி மாநகரில் உலக புகழ் பெற்ற IIM துவக்கம்

திருச்சி மாநகரில் உலக புகழ் பெற்ற IIM துவக்கம்உலக அளவில் புகழ் பெற்ற, இந்தியாவின் தலை சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களாக (MANAGEMENT INSTITUTES) கருதப்படும் IIM கள் இந்தியா முழுவதும் ஏற்கனவெ 7 இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இதில் படித்து பட்டம் பெற்றவர்கள் மாதம் பல இலட்சங்கள் சம்பளம் பெறுபவர்களாகவும் , நவீன சமுகத்தில் பெருமளவில் போற்றப்படுபவர்களாகவும் உள்ளனர்.

படிப்பின் மூலமாகவும் பல கோடி ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்பதை இதில் படித்தவர்கள் நிருபித்து வருகின்றனர்.

மக்களிடையே பெருகி வரும் எதிர்ப்பார்ப்பை மனதில் கொண்டு உலக அரங்கில் சிறந்த அங்கீகாரம் பெற்ற இந்த கல்வி நிறுவனங்களை புதிதாக இன்னும் 7 இடங்களில் தொடங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில் 4 நிறுவனங்கள் வரும் கல்வி ஆன்டில் இருந்து (2010-2011) இருந்து மாணவர் சேர்க்கையை தொடங்க உள்ளன. அவற்றின் விவரத்தை கீழே காணலாம்.

1. தமிழ் நாடு – திருச்சி
2. சத்தீஸ்கர் – ராய்பூர்
3. ஜார்கண்ட் – ராஞ்சி
4. ஹர்யானா – ரோதக்

மற்ற மூன்று மாநிலங்களான ராஜஸ்தான், உத்திராகண்ட், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் இடங்கள் முடிவு செய்யப்படவில்லை.

கேபினெட் கூட்டத்தில் முடிவு செய்ய்ப்பட்ட இச்செய்தியை கேபினெட் செய்தி தொடர்பாளர் திருமதி. அம்பிகா சோனி அவர்கள் சமீபத்தில் அறிவித்தார். இப்புதிய நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 333 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக 140 மாணவர்களும் அதன் பின் வருடந்தோறும் 560 மாணவர்களும் COMMON ADMISSION TEST (CAT)
மூலமாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள். சமூக மற்றும் பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவியும் வழங்கப்படும்.

இந்நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு அதிகமாக இருப்பினும் அச் செலவு ஒரு சிறந்த வருங் காலத்திற்கான நல்ல முதலீடாக அமையும்.

உயர் கல்வியில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் இது போன்ற சிறப்பான கல்வி நிறுவனங்களில் பயின்று , தன்னுடைய சமுதாயத்திற்காக உழைப்பார்களேயானால் இந்த இந்திய நாட்டிலே மிகப் பெரும் மாற்றதை நம் இறைவன் உருவாக்குவான்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் கல்வி அறிவை அதிகப் படுத்துவானாக.

செய்தி:

நி . அல் அமீன்.
TNTJ மாணவர் அணி