திருச்சி மாநகராட்சி கமிஷனரின் இந்துத்துவா போக்கு , வீட்டை முற்றுகையிட தயாரான TNTJ

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாளை 10-09-2013 அன்று திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி என்பவர் இன்றைய செய்தி தாள்களில் நாளை இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்க கூடாது என்றும் மீறி திறந்தால் இறைச்சிகள் மீது பினாயில் ஊற்றி விடுவதாக மிரட்டல் தொனியில் அறிக்கை விட்டு இருந்தார்.

இந்த அறிக்கையால் கொதிப்படைந்த வியாபாரிகளும் பொதுமக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் கூடி களத்தில் இறங்கியது. இந்த தகவலை மாநிலத்திடம் கொண்டு சென்று மாநிலத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணியின் வீட்டை மாலை 5.00 மணிக்கு முற்றுகை  போராட்டம் செய்வதாக  அறிவிப்பு செய்தது
இந்த தகவலை உடனடியாக அனைத்து கிளைகளுக்கும் கொடுக்கப்பட்டு போராட்டத்திற்கு பெருந்திரளாக கலந்துகொள்ள வலியுறுத்தப்பட்டது இந்த போராட்டம் குறித்து  காவல்துறை மற்றும் உளவுதுறை அதிகாரிகளுக்கும்  தகவல் அளிக்கப்பட்டது

மறுகணம் இந்த முற்றுகை போராட்ட செய்தி காட்டு தீ போல் பரவியது.இதனை அறிந்த உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக உயர் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.பத்திரிகை செய்தியை பொருட்படுத்த வேண்டாம் என்றும் நாளை வழக்கம் போல் அனைத்து இறைச்சி கடைகளை திறந்து கொள்ளலாம் என்றும் போராட்டத்தை கைவிடும்மாறு கேட்டு கொண்டனர்.

பின்னர் மாநில நிர்வாகத்தில்  ஆலோசித்து  போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

இந்த செய்தி  தலைமையின் உத்திரவின் படி உடனடியாக போஸ்டராக திருச்சியில் ஒட்டப்பட்டது
அல்லாவின் மாபெரும் கிருபையால் காவிகளின்  சூழ்ச்சி  முறியடிக்கப்பட்டது. வெற்றியை தந்த அல்லாவிற்கே எல்லா புகழும்…………