“திருக்குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில” கத்தர் மர்கஸ் வாராந்திர பயான்

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 23-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைப்பொதுச்செயலாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர்,அப்துர்ரஹ்மான் அவர்கள் “திருக்குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டலப் பேச்சாளர் மௌலவி, அன்சார் மஜீதி அவர்கள் “உணர்ச்சியூட்டும் இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் “அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்று காற்று” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், பொதுச்செயலாளர் மௌலவி. முஹம்மத் அலீ M.I.Sc. ,அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.