நேற்று (07.02.2010) ஞாயிற்றுக் கிழமை பழனி மதனிஷா முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் காலை 9.30 முதல் 01.00 மணி வரை பொது தேர்வு பயிற்சி முகாம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் பழனி கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.ஜே. தாரிக் ராஜா தலைமை வகித்தார்.
நகர டி.என்.டி.ஜே நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சகோ. கலீல் ரஹ்மான்MBA அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும் மாணவ மாணவியரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். பழனி கிளை மாணவரணி செயலாளர் எஸ்.உமர் ஃபாருக் அவர்கள் நன்றியுரை கூறினார்.