திண்டுக்கல்லில் தடையை மீறி மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பேகம்பூரில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடத்த கடந்த 7-3-09 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறை அனுமதி கோரி விண்ணபிக்கப்பட்டது. நோட்டீஸ் வினியோகம் மக்களிடையே செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் அனுமதி இல்லை என்று காவல் துறையினர் கூறிவிட்டனர். பின்னர் மாவட்ட எஸ்.பி அவர்களிடம் முறையிட்டு நமது தலைமை மூலமாக மாநில காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி மீண்டும் 14-3-09 அன்று பொது கூட்டத்தை நடத்திக் கொள்றுமாறு காவல் துறை அனுமதி கடிதம் தந்தது.

இந்த நிலையில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் மற்றும் மார்க்க வியாபாரிகள் சிலரும் சேர்ந்து சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த முஸ்லிம் மக்களிடமும் தொழுகைக்கு வரும் மக்களிடமும் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கினர். தவ்ஹீத் கூட்டதை நிறுத்துவதற்காக அரசியல் கட்சிகளுடனும் கட்டப்பஞ்சாயத்து கழகத்தாருடனும் கைகோர்த்து கொண்டனர். கூட்டம் நடைபெறும் நாள் அன்று தீடிர் என்ற கால்துறையினர் TNTJ வினரை அழைத்து கூட்டம் நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்யப்பட்டள்ளது அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.


மாநில செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் 14 ஆம் தேதி காலையிலிருந்து கூட்டம் நடத்துவதற்கு வேலைகளை செய்து வந்தார்கள். நமது நிர்வாகிகள் டி.எஸ்.பி யை அனுகி எதற்காக கூட்டத்தை தீடிர் என்று ரத்து செய்தீர்கள் என்று கேட்டதற்கு எங்களுக்கு மேலிட உத்தரவு என்று குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் நடத்தினால் பிரச்சனை வரும் என்றும் வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.அதன் படி ஜமால் தெருவில் வாங்கிய அனுமதியை மாற்றி பேகம்பூர் யூனியன் பேங்க் அருகில் கூட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.

 இந்நிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி தங்களின் கட்டப்பஞ்சாயத்திற்கு வீழ்ச்சியாக கருதும் முன்னால் சஹாக்களினாலும் சில அரசியல் கட்சிகளினாலும் மீண்டும் கால்துதுறையினர் அனுமதி மறுத்தனர்.

அங்கு சென்றிருந்து மாநில தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து தடையை மீறி பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்.ஐ சுலைமான் கோவை ரஹ்மதுல்லாஹ் உட்பட கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.