திண்டிவனத்தில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் நகரில் கடந்த 21 / 01 /2011 அன்று மலை 6 .30 மணியளவில், ஜனவரி 27 அன்று பாபர் மஸ்ஜித்  தீர்ப்பை கண்டித்து உயர் நீதி மன்றம் முன்பு நடக்க விருக்கும் பேரணி & ஆர்ப்பாட்டம் ஏன் & எதற்காக என்ற விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் பக்கிர் முஹம்மது அல்தாபி (மாநில தலைவர்) நமது மார்க்கமும் நமது சமுதாயமும் என்ற தலைப்பிலும், சகோதிரர் தௌபீக் (மாநில செயலாளர்) ஜனவரி 27 விளக்கம் என்ற தலைப்பிலும், மற்றும் சகோதரி ஷகீன (ஆலிம) சஹாபி அவர்களும் உரையாற்றினார்கள்.

மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.