தாய்லாந் பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு 10! பேர் மரணம்!!

2484260கடந்த திங்கள் கிழமை அன்று தாய்லாந்தின் தெற்குபகுதிலுள்ள சோய்ரோங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மஸ்ஜிதில் புகுந்த மர்மமனிதர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் மரணமடைந்தனர்.19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்ஜிதில் மாலைநேரத்தொழுகை நடந்துக்கொண்டிருந்தபொழுதான் மர்ம மனிதர்கள் உள்ளேபுகுந்து சுட்டுள்ளனர்.அப்போது 50 நபர்கள் தொழுகையில் ஈடுப்பட்டிருந்தார்கள், என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.ஒரு இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதலுடன் சம்பந்தபடுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள் ஆனால் நிச்சயமாக அவர்கள் இதனை செய்திருக்கமாட்டார்கள்.அதேவேளையில் முஸ்லிம்கள் யாரும் நிச்சயாமாக மஸ்ஜிதிற்குள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தியிருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்.

இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.