தாயிக்கள் பயிற்சி முகாமிற்கு உங்கள் நன்கொடைகளை அள்ளித் தாருங்கள்!

இறைவனது மாபெரும் கிருபையால் நமது ஜமாஅத்தின் பணிகள் நாம் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு மென்மேலும் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.

ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நம்மிடம் தாயிகள் இல்லாமையால் பல இடங்களில் தாயிகள் இல்லாமல் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மாநில தலைமையால் எதிர்கொள்ள முடிய வில்லை. தலைமைக்கு ஒரு நாள் வரும் தபால்கள் 30 என்றால் அதில் குறைந்தது 5 தபால்களாவது தாயிகள் கேட்டு தினம் தினம் வருகின்றன.

ஒரு மாணவர் நான்கு அல்லது இரண்டு ஆண்டுகள் மதரஸாக்களில் கல்வி கற்று வரும் காலம் வரை பொறுத்திருக்க முடியாமையால், மாநில தலைமை பல முறை ஆலோசனை செய்தபின் தான் 30 நாட்கள் தாயிகள் பயற்சி முகாம் நடத்துவது என்ற புதுத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்திவருகின்றோம்.

கடந்த 25.01.2010 ஆம் நாள் முதல் நமது மாநில தலைமையகத்தில் 40 சகோதரர்கள் பயிற்சி நடைபெற்று வருகின்றனர்.

இவர்களுக்குறிய உணவு, தேநீர் போன்ற இதர சிற்றுண்டிகள் மற்றும் தேவையான புத்தகங்களுடன் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் ஒருவருக்கு ஏற்படும் ஒரு மாதச் செலவு ரூபாய் 3,000.00 வருகின்றத. நாற்பது சகோதரர்கள் தங்கி பயின்றுவருகின்றார்கள். இவர்களுக்கான மொத்தச் செலவு ரூபாய் 1,20,000.00 என்று எதிர்பார்க்கபடுகின்றது.

தற்பொழுதுள்ள பொருளாதார நிலையில் மாநிலத் தலைமையால் இச்செலவீணங்களை எதர்கொள்ள முடியாது என்பது தாங்கள் அறிந்த ஒன்றே.

ஆகையால் தங்களால் முடிந்த அளவு 40 மாணவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டால் மாநிலத்தின் மேல் உள்ள பொருளாதாரச் சுமை குறையும். இத்திட்டத்தை இறைவனது கருணையைக்கொண்டு உங்களைப் போன்ற நல் உள்ளம் கொண்ட சகோதரர்களின் மேல் உள்ள நம்பிக்கையைக் கொண்டு தான் இத்திட்டம் தீட்டப்பட்து என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. இதற்குறிய பொருளாதார உதவியை நீங்களும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

-இப்படிக்கு

எம். அப்துல் ஹமீது
மாநில பொதுச்செயலாளர்

பயிற்சி முகாம் பற்றிய செய்தி மற்றும் புகைப்படங்கள்! Click Here

தவ்ஹீத் ஜமாஅத் வங்கி கணக்கு விபரங்கள் Click Here