தவறை ஒத்துக் கொண்ட இலங்கை பத்திரிக்கை

சமீபத்தில் இலங்கை பத்திரிக்கை ஒன்று தவ்ஹீத் ஜமாஅத் பற்றி தவறான செய்தி ஒன்றை வெளியிட்டது. தகவல் அறிந்ததும் இலங்கையில் உள்ள SLTJ  சம்பந்தபட்ட இதழக்கு செய்தி தவறு என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து தவறை உணர்ந்த லக்பிம நிவ்ஸ் பத்திரிக்கை கடந்த 3-10-2010 அன்று மறுப்பு செய்தி வெளியிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் இதை விவரிக்கும் வண்ணம் இலங்கை பத்திரிக்கையான நவமணி வார இதழ் ”தமிழகத்தில் தி.மு.க அரசு அமைய முஸ்லீம்களின் ஆதரவை பெற்றுக் கொடுத்த தவ்ஹீத் இயக்கம் தீவிரவாத இயக்கமா?” என்ற தலைப்பில் நாம் அளித்த விளக்கதை வைத்து வரிவான செய்தி ஒன்றை கடந்த 24-9-2010 அன்று வெளியிட்டது குறிப்பிடதக்கது.

நவமணி பத்திரிக்கை செய்தி