தலைமையகத்தில் துவங்கியது ஒரு மாத கால பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி முகாம்

DSC00656தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைந்துவிட்ட நிலையில் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் பிரச்சாரர்களை அனுப்பி ஏகத்துவ பிரச்சாரம் செய்ய போதிய ஏகத்துவ பிரச்சாரகர்கள் இல்லாமல் தாயிக்கள் பற்றாகுறை ஏற்படுகின்றது.

இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை ஏகத்துவ பிரச்சாரகர்களை அதிக அளவில் உருவாக்க ஒரு மாத கால பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி முகாமை நேற்று (25-1-2010) துவங்கியுள்ளது. மாநில தலைமையகத்தில் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பி.ஜே, அல்தாஃபி உட்பட பல்வேறு மார்க்க அறிஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

ஒருமாதத்திற்கு தங்குமிடம் உணவு அணைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்டுகின்றது என்பது குறிப்பிடதக்கது.