தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம் – 2014

இன்று (25-09-2014) தமிழகத்தில் பிறை எங்கும் தென்படவில்லை. எனவே பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் இம்மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்து வரக்கூடிய அக்டோபர் 6 திங்கள் கிழமை தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்ஷாஅல்லாஹ் கொண்டாடப்படும்.

வெள்ளிக் கிழமை (26-09-2014) மஹரிப் முதல் துல் ஹஜ் மாதம் ஆரம்பம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

குறிப்பு :
26-09-2014 வெள்ளிக்கிழமை மஹரிபிலிருந்து குர்பானி கொடுக்க எண்ணியுள்ளவர்கள் தங்களது நகம் முடிகளை குர்பானி கொடுக்கும் வரை களையாமல் இருப்பது நபி வழி என்பதை கவனத்தில் கொள்ளவும்.