தனி நபர் பெயரில் உள்ள பள்ளிவாசலில் TNTJ வினர் தொழக்கூடாதா?

ஒரு தனி நபர் பள்ளிவாசல் கட்டித் தந்தால் அது அல்லாஹ்வுக்காக கட்டிக் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக கட்டிக் கொடுப்பது என்றால் மற்றவர்களுக்கு என்ன உரிமையோ அது தான் அவருக்கும் இருக்க வேண்டும்.

நானும் என் குடும்பத்தினரும் தான் நிர்வாகம் செய்வோம். இது குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறினால் அதை ஏற்க முடியாது. அவருக்கு பயந்து கொண்டு மக்கள் அவரை அட்ஜஸ்ட் செய்யும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்காது.

கட்டடத்தை விட கொள்கை தான் முக்கியம். அவர் விரும்பாத ஒரு நிலையை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தால் பள்ளிக்கு வராதீர்கள் என்று சொல்லிவிடுவாரோ என்ற தயக்கம் மக்களுக்கு ஏற்படக் கூடாது.

பணம் செலவழித்தால் மக்கள் கூட்டத்தை நம் கையில் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை சரி இல்லை என்பது தான் இதன் காரணம்.

அல்லாஹ்வுக்காக பள்ளியை வக்ஃப் செய்யுங்கள். மக்கள் உங்களை நிர்வாகியாகத் தெர்வு செய்தால நிர்வாகியாக இருங்கள். இல்லாவிட்டால் மக்களில் ஒருவராக இருங்கள் என்று அறிவுரை கூறிய பிறகும் ஏற்காதவர் விஷயத்தில் தான் இந்த முடிவு.

தவ்ஹீத் ஜமாத்துக்குச் சொந்தமில்லாத் பள்ளியில் தொழக்கூடாது என்று நாம் கூறுவதாக சிலர் கூறுவது விஷ்மத்தனமானது. அப்படி நாம் ஒரு போதும் சொன்னதில்லை. ஷிர்க செய்யும் பள்ளியில் தொழகூடாது என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை.

வளை குடா பள்ளிகளில் ஷிர்க் நடப்பதில்லை.அப்படி நடந்தால் நமது நிலை அது தான்.

அது போல் பள்ளியை சுய நலனுக்கு பயன்படுத்தினால் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என்பதற்காக அமைப்பு சார்பாக அத போன்ற பள்ளிகளை ஆதரிக்கக் கூடாது என்கிறோம்