தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்யக்கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹஜ்ஜின் பெயரால் மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் அனைத்து தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களையும் மத்திய அரசு  உடனே தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், தமிழகத்தில் 2500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஹஜ்ஜுக்கு அனுப்புவதாக சொல்லி அவர்களை அனுப்பாமல் ஏமாற்றிய ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களை நடத்துபவர்களை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மெமோரியல் ஹால் அருகில் இன்று மாலை (23-11-2010) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத்தலைவர்  ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.