தனிமனித உரிமையில் தலையிடும் மத்திய அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

தனிமனித உரிமையில் தலையிடும் மத்திய அரசிற்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

தனி நபர்கள் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் செல்போன்களில் உள்ள தகவல்களை சம்பந்தபட்டவர்களின் அனுமதி இல்லாமல் உளவு பார்க்க உள்துறை அமைச்சகம்
அரசு முகமைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

தனி மனித சுதந்திரத்தின் மீதான மத்திய அரசின் தாக்குதலாகவே இதை பார்க்க முடிகிறது.

பண மதிப்பிழப்பு மற்றும் G.S.T வரி விதிப்பில் மத்திய அரசு நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு அந்த எதிர்ப்பலைகள் இன்னும் ஓயவில்லை.

இதற்கிடையே விவசாயிகள் போராட்டம், பொட்ரோல் விலை உயர்வு, மாட்டின் பெயரால் நாட்டு மக்கள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு மோடி வாய் திறக்கவில்லை.

தற்போது யாருடைய அனுமதியும் இல்லாமல் குடிமக்களின் கணினியை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அரசியல் சட்ட அமைப்பு வழங்கி இருக்கும் தனி மனித சுதந்திரதை பறிக்கும் செயல்.இது தனி மனித சுதந்திரத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள போராகும்.

டிஜிட்டல் இந்தியா என்று கூறி ஆதார்திட்டத்தை கொண்டுவந்து தனிமனித இரகசிய தகவல்கள் காற்றில் பறந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் தங்களின் கணினி மற்றும் கைப்பேசி தகவல்களும் களவாடப்படுமோ என்ற அச்சத்தில் இந்திய குடிமக்கள் உள்ளனர்.

குற்றவாளிகள் என்று சந்தேகிக்க முகாந்திரம் உள்ளவர்களை உளவு பார்க்க ஏற்கனவே போதுமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளநிலையில் இந்த சட்டம் நாட்டுமக்களின் உள்ளத்தில் மிரட்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையாகத்தான் இந்த நடைமுறை உள்ளது. எனவே வரைமுறையில்லாமல் அரசு முகமைகள் குடிமக்களை உளவு பார்க்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

ஊடகத் தொடர்புக்கு : 9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்