தடையை மீறி போராட்டம் – பி.ஜே பேட்டி: தினமணி செய்தி

தடையை மீறி போராட்டம் பி.ஜே பேட்டி: தினமணி செய்தி

பாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

அதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும்.

இந்தப் பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.

25-1-11 தினமணி