தஞ்வை வடக்கில் நடைபெற்ற ஜுலை மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ஜுலை மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 28.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தையில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவை அப்துர்ரஹீம் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 4 சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு இன்ஷா அலலாஹ் சிறப்பாக நடைபெறுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டது.

மேலாண்மைக்குழு உறுப்பினரும், மாநாட்டுக்குழு உறுப்பினருமான கோவை அப்துர்ரஹீம் அவர்கள் மேற்கண்ட நிகழ்ச்சிக்காக செய்ய வேண்டியவை பற்றி பட்டியலிட்டார்கள்.

தெருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் வாயிலாக ஜூலை 4 க்காக மக்களை திரட்டவேண்டும். சைக்கிள் பேரணி, வாகன பேரணி, நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

ஊர் ஜாமாத்தார்களை அனுகி ஜூலை 4 ல் பங்கேர்ப்பதர்க்கு ஜும்மாக்களில் அறிவிப்பு செய்வதற்கு மேற்கண்ட நிர்வாகிகளை அணுகுவது என முடிவெடுக்கப்பட்டது, சுவர் விளம்பரம் பரவலாக செய்வது என முடிவெடுக்கப்பட்டது, முதல் கட்டமாக பள்ளிவாசல்களின் அருகில் ப்ளெக்ஸ் விளம்பரம் வைப்பதென முடிவெடுக்கப்பட்டது.