தஞ்சை வடக்கு மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற ரேணுகா

தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா அத்திப்பாக்கம் ஊரைச் சார்ந்த செல்லையன்-தவமணி தம்பதியரின் மகள் ரேணுகா என்கிற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். இவர் தன்னுடைய பெயரை நஸ்ரின் என்று மாற்றிக் கொண்டார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட துனை செயலாளர் காட்டூர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் அபிடவிட் போடப்பட்டு, அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் மூன்று மாத அடிப்படை கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.