தஞ்சை வடக்கு மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த  செயல்வீரர்கள் கூட்டம் 19.09.2015 சனிக்கிழமை அன்று குடந்தை மர்கஸில் மாலை 4.30 மணிக்கு மாவட்ட தலைவர் சகோ. அப்துல் மாலிக் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. சகோ. சையது சுல்தான் அவர்கள் இக்லாஸ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனைத்து கிளைகளிடம் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய ஆலோசனைகள் கேட்கப்பட்டது. சகோ. முகம்மது யூசுப் மாநில பொதுச்செயலாளர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.