தஞ்சை வடக்கில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான மேலக்காவேரி அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில் கடந்த 19-2-11 அன்று சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் DR மஞ்சுளா அவர்கள் பங்கேற்றார். தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில், ரியாத் மண்டல செயலாளரும், அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு ரியாத் தலைவருமான சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

அதனை அடுத்து என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும், உடற்பயிற்சி செய்தல், டயட் கண்ட்ரோல் என்றால் என்ன போன்ற விஷயங்களை Dr. மஞ்சுளா அவர்கள் எளிய தமிழில் விளக்கினார்.

பெண்கள் மட்டும் பங்கு பெற்ற மருத்துவ சம்பந்தமான கேள்வி/பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில், Dr. மஞ்சுளா அவர்களுக்கும், உதவி மருத்துவர் Dr. செல்வி அவர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகளை டாக்டர்கள் பாராட்டியது குறிப்பிடதக்கது – அல்ஹம்துலில்லாஹ்!

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்நூர் கல்லூரி செயலாளர் சகோ. சுவாமிமலை ஜாஃபர் சிறப்பாக செய்திருந்தார்.