தஞ்சை வடக்கில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்  அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் கடந்த நேற்று (16-3-2010) பெண்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றம். இம்முகாம்   வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அந்நூர் பெண்கள் கல்லூரி தலைவரும் மாவட்ட து. செயலாளருமான A.ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட து.தலைவர் B.இம்தியாஸ், மாவட்ட து. செயலாளர் M.சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக மதரசா அந்நூர் பெண்கள் கல்லூரி ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.